ஏன் ஆபாசமாக நடிச்சே? கிண்டல் செய்யப்பட்ட நடிகை ரியாமிகா.. தற்கொலை செய்ததன் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

நீ ஆபாசமா நடித்ததால் தான், உனக்கு பட வாய்ப்புகள் வரவே இல்லை என்று சக நடிகர்கள் கேலி செய்ததாலேயே நடிகை ரியாமிகா தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியாஸ், அகோரி போன்ற திரைப்படங்களில் நடித்த ஈரோட்டை சேர்ந்த நடிகை ரியாமிகா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

முதல்கட்டமாக இந்த தற்கொலையில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தான் நடித்த படம் ஒன்றில் ரியாமிகா ஆபாசமாக நடித்திருந்திருக்கிறார். இவ்வளவு ஆபாசமா நடித்ததால் தான் படவாய்ப்புகள் எதுவும் உனக்கு வரவில்லை என்று சக நடிகர்கள் கேலி செய்தார்களாம்.

அதற்கேற்றபடி, பட வாய்ப்புகளும் வராமல் போகவே ரியாமிகா மனம் நொந்து போய் உள்ளார். போதிய வருமானமும் இல்லை

எங்கே போனாலும் தான் ஆபாசமாக நடித்ததை பற்றியே பேசி கிண்டல் செய்ததால் உச்சக்கட்ட விரக்திக்கு ரியாமிகா சென்றிருக்கலாம் என காரணங்கள் கூறப்படுகின்றன.

மேலும் காதலன் தினேஷிடமும் அவருக்கு நிறைய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers