சிறுமிக்கு 30 வயதான நபருடன் திருமணம்: இறுதி நேரத்தில் நேர்ந்த பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இறுதிநேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சுரேஷ் (30). சென்னையில் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார்.

இவருக்கும் 14 வயது சிறுமிக்கும் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அதற்கான இறுதி வேலைகள் நடந்தன.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அதிகாரி ரம்யா, மயிலாடுதுறை குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் கிரிஜா மற்றும் மகளிர் காவல்துறையினர் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டபடி குற்றம் என கூறி சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலகத்தில் ஓப்படைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers