பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.. வெளிநாட்டு பணியிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவன்: மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

மனைவியின் தவறான நடத்தை குறித்து தட்டி கேட்ட கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (46). இவருக்கும் சபீனா பானு (34) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

தற்போது வரை தம்பதிக்கு குழந்தை இல்லை. வேலைக்காக ஜாகிர் உசேன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் சபீனாவுக்கு எதிர்வீட்டில் இருந்த வாகன ஓட்டுநர் யுவராஜுடன் (29) கள்ளக்காதல் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

கடந்தாண்டு வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஜாகீரிடம், சபீனா-யுவராஜ் இருவரின் தனிமை சந்திப்பைப் பற்றி பகுதி மக்கள் கூறினர்.

ஆனால் மனைவி மீதுள்ள நம்பிக்கையால் அதை அவர் நம்பவில்லை.

ஒரு கட்டத்தில் இருவரும் தனிமையில் சந்திப்பது, நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருப்பது போன்ற செய்கைகளால் ஜாகீருக்கு சந்தேகம் ஏற்பட, இவ்வளவு நேரம் யாருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கத் தொடங்கினார். சபீனா அதை பொருட்படுத்தாமல் எப்போதும்போல தனது காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றும் இது தொடர்பாக சண்டை ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சபீனா, கணவர் ஜாகீர் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இதையடுத்து வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஜாகீர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் சபீனா மற்றும் அவரது காதலன் யுவராஜை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers