இளையராஜாவின் பாடல்களை பாடுவதற்கு எத்தனை லட்சம் பணம் கொடுக்க வேண்டும்? வெளியான முழு விவரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பின்னணி பாடகர்கள் பாடக் கூடாது, அப்படி மீறி பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாடகர்கள், பாடகிகளும் எனது பாடலுக்கு பணம் வாங்குகிறார்கள். அந்த பணத்தில்தான் பங்கு கேட்கிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இளையராஜா பாடல்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட ‘ஏ’ பிரிவினருக்கு வருடத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ‘பி’ பிரிவினருக்கு ரூ.15 லட்சமும் ‘சி’ பிரிவினருக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயித்து உள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், சித்ரா உள்ளிட்ட பெரிய பாடகர்களின் கச்சேரி ஏ பிரிவு என்றும் அதை விட சிறிய பாடகர்கள் கச்சேரி பி பிரிவு, சி பிரிவு என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.

இந்தியாவில் மைதானங்களில் நடக்கும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாடுவதற்கு ரூ.75 ஆயிரமும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பாட ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் ஓட்டல்களில் பாட ரூ.30 ஆயிரமும் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers