'எக்ஸ் வீடியோஸ்' பட நாயகி ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரியாமிகா சென்னையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹரியின் உதவியாளர் சுந்தர் இயக்கத்தில் தமிழ், இந்தி ஆகிய படங்களில் வெளியாக வரவேற்பை பெற்ற திரைப்படம் 'எக்ஸ் வீடியோ'.

முதல் படத்திலே மிகவும் துணிச்சலாக கவர்ச்சியான பாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் தன்னுடைய பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வளர்ந்து வரும் நடிகை ரியாமிகா (26).

அதனை தொடர்ந்து 'அகோரியின் ஆட்டம் ஆரம்பம்', 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படங்களில் நடித்து ஓரளவு தமிழ் மக்களுக்கு தெரிந்த முகமாக மாறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் இளம்நடிகை திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலை கைப்பற்றியுள்ள பொலிஸார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரியாமிகாவுக்கு வரும் வருமானத்தை கொண்டுதான் அவரது குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல் கட்டவிசாரணையில் தெரியவந்து உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...