தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழனை மணக்கும் அமெரிக்க பெண்! விரைவில் டும்.. டும்.. டும்

Report Print Vijay Amburore in இந்தியா

சமூகவலைத்தளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா விரைவில் கண்ணன் என்ற தமிழக இளைஞரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார்.

அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சமந்தா, இங்குள்ள மக்களுடன் பேசி தன்னுடைய தமிழ்மொழி திறமையை மெருகேற்றியதோடு, தன்னுடைய ட்விட்டரின் வாயிலாக தமிழ் மக்களிடம் பேசியும் தன்னுடைய தமிழ் பேசும் திறனை வளர்த்து கொண்டார்.

இந்த நிலையில் சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கண்ணன் என்ற தமிழ் இளைஞரை விரைவில் மணமுடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமந்தாவிற்கு பூ வைக்கும் நிகழ்வானது இன்று கண்ணனின் சகோதரி வீட்டில் நடைபெற்றது. அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், கடந்த வாரம் நான் இந்தியா வந்திருந்த பொழுது, என்னுடைய நண்பன் கண்ணனுடன் கேரளாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்துகொண்டிருந்தேன்.

தென்னமலை என்னுடன் இடத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில், மேற்கத்திய பாணியில் என்னை பார்த்து காதலிப்பதாக கண்ணன் கூறினார் என பதிவிட்டுள்ளார்.

இதனை மகிழ்ச்சியக பதிவிட்டுள்ள சமந்தா, இருவருக்கு வரும் மே மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னை விட தன்னுடைய குடும்பத்தாருக்கு கண்ணனை மிகவும் பிடித்துவிட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த இணையதளவாசிகள் பலரும், சமந்தா - கண்ணன் ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers