இரயில் பயணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 50 மனித மண்டை ஓடுகள்: அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் பயணி ஒருவரிடம் இருந்து 50-கும் அதிகமான மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில் வைத்தே பொலிசார் குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இதில் அவரது பைகளில் இருந்து சுமார் 50-கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தின் பாலியா பகுதியில் இருந்து கொண்டுவருவதாகவும், பூட்டான் வழியாக சீனாவுக்கு கடத்த உள்ளதாகவும் கைதான சஞ்சய் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி அவரிடம் இருந்து நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டு பணத்தாள்களும் மொபைல் சிம் அட்டைகளும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் மருத்துவ மாணவர்களுக்காக குறித்த மனித மண்டை ஓடுகளை கடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகளை நேபாளம் மற்றும் பூட்டான் நடுகள் வழியாக சீனாவுக்கு கடத்தும் கும்பலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளனவா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்