திருமணமான பெண்ணுடன் தொடர்பு! பாலியல் தொழிலில் ஆடம்பர வாழ்க்கை: ஜெயந்தியின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் பாலியல் தொழில் செய்துவந்த ஜெயந்தியுடன் சேர்ந்து பொலிஸ் ஒருவர் மிரட்டிப் பணம் பறித்த தகவலும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது.

சென்னையில் பாலியல் தொழில் செய்துவந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் ஒருவர் நட்பாக இருந்துள்ளார்.

ஜெயந்தி மூலம் ஆடம்பரமாக வாழ்ந்த பொலிஸ் தற்போது சிக்கிக் கொண்டதையடுத்து அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயந்தி தனக்கு பொலிசுடன் நட்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காந்திருந்தேன்.

அப்போது அங்கு வந்த குறித்த பொலிஸ, ஜெயந்தியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விசாரித்தபோது ஜெயந்தியின் குடும்பக் கதையைக் கேட்டு பொலிஸ் பரிதாபப்பட்டுள்ளார். அதன்பிறகே இருவருக்குமான நட்பு தொடர்ந்தது.

எனக்கு திருமணமாகிவிட்டது. கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால்தான் இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

ஜெயந்தியிடம் பொலிஸ் குறித்து விசாரித்தபோது அவர் எனக்குத் தெரியும் என்ற தகவலை மட்டும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜெயந்தி எந்தவித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்,

ஜெயந்தியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என்ற விவரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பொலிஸ் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்