ரத்தபரிசோதனை செய்ய தயார்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கட்சியை விட்டு வெளியேறிய காயத்ரி: தமிழிசை சவுந்திரராஜன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

குடிபோதையில் கார் ஓட்டி பொலிசில் சிக்கியதாக நடிகை காயத்ரி ரகுராம் குறித்த செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்து பலமுறை விளக்கம் அளித்துள்ளார் காயத்ரி.

தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில் கிடையாது என்று தமிழக பாஜக கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு காயத்திரி ரகுராம் கோபமாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் ‘அன்புள்ள தமிழிசை மேடம், நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி.

நான் பா.ஜனதாவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.

தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சனைகளை சந்திப்பதைவிட அதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். அன்று காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் நான் உண்மையை விளக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை.

அன்று நான் தான் காரை ஓட்டிச் சென்றேன். காவலர் ஒருவர் என்னை இறக்கிவிட்டார் என்று சொல்வது பொய். நான் தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடையாது. வேண்டுமென்றால் டெல்லியில் புகார் சொல்லலாம்.

பிக்பாஸில் பங்கேற்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்தார். அன்றே விலகிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers