தரையில் மோதி வெடித்து சிதறிய விமானம்.. விமானியின் நிலை என்ன? பதறவைக்கும் காட்சிகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் தரையில் மோதி வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹகிம்பேட் விமானப்படைத் தளத்தில் இருந்து, பயிற்சிக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கிரண் என்ற சிறிய ரக பயிற்சி விமானம் வழக்கம் போல் இன்று காலை புறப்பட்டது.

விமானமானது யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பஹுபேடா என்ற இடத்தை அடைந்தபோது திடீரென தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என இந்திய விமானப் படை செய்தித்தொடர்பாளர் அனுபம் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதனிடையில் விமானம் தீயில் கருகி நொறுங்கிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்