நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.. ஏதோ என்னால முடிஞ்சது...சிறுமி செய்த நெகிழ்ச்சி செயலின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்து நெகிழ வைத்துள்ளார் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சஞ்சனா.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுத்துள்ளார் சஞ்சனா என்ற சிறுமி.

அவர் கூறுகையில், நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். வீட்டுல தாத்தாவும், அம்மாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால முடிஞ்ச உதவிகளை செய்யலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க.

நான் என் உண்டியலில் கொஞ்சம் காசு சேமித்து வைச்சிருந்தேன். அதைக் கொண்டு வந்து தாத்தாகிட்டக் கொடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னேன். தாத்தா அந்த பணத்தை சரியான இடத்தில் சேர்த்து விட்டார் என கூறியுள்ளார்.

சஞ்சனாவின் உண்டியலில் 3550 ரூபாய் பணம் இருந்தது.

அவருடைய தாத்தா நாகேந்திர பாரதி கூறும்போது, வீட்டுல நாங்க பேசிட்டு இருந்ததைக் கேட்டுட்டு அவ மூணு உண்டியல்ல ஒரு உண்டியலை உடைச்சு அந்த பணத்தை கொடுக்க சொன்னா, மிகவும் பெருமையாக இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...