பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை கரம் பிடித்த நபர்: புதுமண தம்பதியின் தற்போதைய நிலை என்ன?

Report Print Raju Raju in இந்தியா

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை திருமணம் செய்த அருண்குமார் தங்களது திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் அருண்குமார் (22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை கடந்த மாதம் 31-ஆம் திகதி திருமணம் செய்தார் அருண்குமார்.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் அதற்கான ரசீது வழங்காததால், இவர்களது திருமணம் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநங்கையின் திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுமண தம்பதிகள் தூத்துக்குடி ஆட்சியரிடம் நேற்று மனு அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...