நான் குடிக்கவில்லை! ஆனால் அந்த சம்பவம் உண்மை தான் - காயத்ரி ரகுராம்

Report Print Vijay Amburore in இந்தியா

நடிகை காயத்ரி ரகுராம் மது போதையில் கார் ஒட்டியதாக வெளியான பரபரப்பு செய்தி தவறானது என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

பாஜகவின் தமிழக கலைத்துறை செயலாளராக இருக்கும் நடிகை காயத்ரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு சொகுசு காரை ஒட்டியதாகவும், காவலர் சோதனையில் 33 சதவிகித போதையில் இருந்ததாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காயத்ரி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள காயத்ரி, எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது. அதோடு சேர்ந்து தொடர் படப்பிடிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

அன்றைய தினம் நான் என்னுடைய அம்மா, பிக்பாஸ் காஜல் உடல் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டதால், இன்ஹேலர் மற்றும் காஃப் சிரப் (cough syrup) மருந்தை பயன்படுத்தியிருந்தேன்.

பொலிஸார் சோதனையில் 33 சதவிகிதம் பதிவாகியதாக கூறினார்கள். மருந்து பயன்படுத்தியதால் தான் அப்படி காட்டியிருக்கும் என நான் கூறினேன். அனால் அவர்கள் என்னை அபராதம் கட்ட சொன்னார்கள். அதோடு என்னிடம் லைசென்ஸ் இல்லாததால் அதற்கும் அபராதம் கட்ட சொன்னார்கள்.

என்னிடம் பணம் இல்லாததால், நண்பர் ஒருவரிடம் வாங்கி கொடுத்துவிட்டு, என்னுடைய அம்மாவுடன் வீட்டிற்கு திரும்பிவிட்டேன். ஆனால் என்னை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே, நான் நடுரோட்டில் பொலிஸாருடன் சண்டையிட்டதாகவும், காலையில் பொலிஸார் தான் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டதாகவும் தவறான தகவல்களை பரப்பி விட்டனர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்