அனைத்தும் பொய்..சின்மயி கேரக்டர் பற்றி நீதிமன்றத்தில் சொல்கிறேன்: நடிகர் ராதாரவி அதிரடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி தன்னை மிரட்டுவதாகம் சின்மயி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ராதாரவி அளித்துள்ள பேட்டியில், சின்மயி மீடூ என்று புகார் அளித்தார். பின்னர் டப்பிங் யூனியன் மீதும் புகார் சொல்கிறார்.

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று புகார் சொல்லட்டும். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் சின்மயி சொல்வதில் நிறைய பொய்தான் இருக்கிறது.

டப்பிங் யூனியனில் பெண்களின் பாதுகாப்புக்கென்று ஒரு குழு இருக்கிறது. வாசுகி அவர்கள் தலைமையில், மேற்பார்வையில் அங்கே குழு அமைத்திருக்கிறோம். அவர்கள்தான் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியை நீக்கியிருக்கிறார்கள். இது பழி வாங்கும் நோக்கமெல்லாம் இல்லை.

மற்றபடி, சின்மயி நீதிமன்றதுக்கு போகட்டும். வழக்கு தொடரட்டும். சின்மயி கேரக்டர் பற்றி நீதிமன்றத்தில் அப்போது நான் சொல்லுகிறேன் என ராதாரவி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers