திருமண நாளில் இளைஞரை காவு வாங்கிய ரயில் பயணம்... நடந்தது அறியாமல் தேடிய மனைவி: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 24 வயது முகமதலி என்பவர் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் மனைவியுடன் ரயிலில் மும்பை சென்றுள்ளார்.

போகும் வழியில் இரவு உணவுக்காக கை கழுவும் பொருட்டு இருக்கையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஆனால் ரயில் இருந்து தவறி விழுந்து குறித்த இளைஞர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

கை கழுக சென்ற கணவர் திரும்ப வராதது கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த ரயிலின் பல பெட்டிகளில் தேடியுள்ளார்.

பல கிலோ மீற்றர் கடந்த நிலையில் அடுத்த ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தபோது, அங்குள்ள அதிகாரிகள் நடந்தவற்றை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இறந்தது தமது கணவர் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி தாஹிரா மற்றும் முகமதலி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

மும்பையில் பணியாற்றும் முகமதலி தமது முதலாமாண்டு திருமண நாள் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டும் மனைவியுடன் ஒரு மாதம் முன்னரே மும்பையில் இருந்து திருச்சூர் வந்துள்ளார்.

தற்போது உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் முகமதலியின் சடலத்தை திருச்சூருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers