30 வயது பெண்ணை வைத்து அந்த தொழில் செய்து வந்துள்ள பொலிஸ்! சிக்கியது எப்படி? வெளியான பின்னணி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் ஒருவர் 30 வயது பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை என்.எஸ்.கே நகரிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர், என் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆள் ஒருவர், தன் வீட்டிலிருந்த பணத்தை எல்லாம் திருடிச் செல்ல நினைத்தார்.

ஆனால் நான் அவரை தப்பித்து செல்லவிடாமல் பிடித்து வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் பொலிசார் அந்த பெண் சொன்ன இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர் சொன்னது போலவே அங்கிருந்த நபரை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அந்த நபர் சொன்ன தகவல் பொலிசாரையே அதிரவைத்துள்ளது. அந்த நபர், இந்த பெண் பாலியல் தொழில் செய்பவர். இவர் தான் என்னை அழைத்தார், அதன் பின் திடீரென்று வந்த ஏட்டு ஒருவர், அவரிடம் இருந்த பணத்தை எல்லாம் பிடுங்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் பொலிசார் அந்த பெண்ணையும், குறித்த நபரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது அந்த பெண்ணின் செல்போனை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அதில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வேலைபார்க்கும் ஏட்டையா பார்த்திபனிடம் அந்த பெண் அடிக்கடி பேசியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் பொலிசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பார்த்திபனுக்கு அந்த பெண்ணுக்கும் பல நாட்கள் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் இரண்டு பேரும் சேர்ந்துதான் சென்னையில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். இதற்காக பார்த்திபன் ஒரு வாடகை வீடு ஒன்றை எடுத்து அந்த பெண்ணை தங்க வைத்திருக்கிறார். வெளி இடங்களுக்கு சென்று கஸ்டமர்களை அந்த பெண் வீட்டுக்கு அழைத்து வருவாராம். அப்படி வரும்போது பார்த்திபனுக்கு தகவலும் சொல்லி விடுவாராம்

பார்த்திபனும் ரெய்டுக்கு போவது போல பெண்ணின் வீட்டுக்கு சென்று அங்கிருக்கும் கஸ்டமர்களிடம், கைது செய்யாமல் இருக்க, பணத்தையும் அந்நபரிடம் பிடுங்கிவிட்டு, அவர்களை மிரட்டி அனுப்பிவிடுவாராம்.

நேற்றிரவும் இப்படித்தான் ஒருவர் அந்த வீட்டுக்கு சென்ற போது வழக்கம்போல் பார்த்திபன் பணத்தை அந்த நபரிடம் வாங்கி சென்றுவிட்டார். அதற்கு பிறகும் அந்த பெண் குறித்த நபரிடம் பணம் கேட்கபோய் அது தகராறாக போய்விட்டது. இதனால் அந்த பெண் அந்த நபரை திருடன் என்று சொல்லி பொலிசாரிடம் காட்டி கொடுக்க முயற்சி செய்ய, இறுதியில் இருவரும் மாட்டிக் கொண்டனர்.

இந்த விவரங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை உயரதிகாரிகள், ஏட்டு பார்த்திபனை சஸ்பெண்ட் செய்துள்ளனர். வழிப்பறி, கொலை மிரட்டல் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் இவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers