இதயத்தில் தொடங்கி கண்ணில் முடிந்த காதல்: திருமணமான 6 மாதத்தில் புதுமண தம்பதியினரின் விபரீத முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருமணமான 6 மாதத்தில் புதுமணதம்பதியினர் தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் மற்றும் சத்யபிரியா ஆகிய இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் சாட் செய்து வந்த இவர்கள், பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர்.

திருமணத்தை தொடர்ந்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். டீ கடை ஒன்றில், நத்தகுமார் வேலை செய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் நந்தகுமார் வேலைக்கு வராததால், டீ கடை உரிமையாளர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், ஜன்னலை திறந்து அவர் பார்த்துள்ளார். அங்கு மின் விசிறியில் நந்தகுமார் சடலமாக தொங்கியதைக் கண்ட அவர், பொலிசில் தெரிவித்துள்ளார்.

பின்னர் பொலிசார் உள்ளே சென்று பார்த்தபோது, தரையில் சத்யபிரியாவும் சடலமாக கிடந்தார். அவரது கையில் ஒரு விஷமருந்து இருந்தது.

காதல் தம்பதியின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers