24 வயது இளசுகளின் பிடியில் சிக்கிய 44 வயது பெண்மணி: விசாரணையில் வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையில் 44 வயது பெண்மணியுடன் வாட்ஸ் அப் வாயிலாக ஆபாசமாக விளையாடிய 24 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயது பெண் ஒருவரின் வாட்ஸ்-அப்புக்கு கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத செல்போன் நம்பரில் இருந்து ஆபாச படங்கள் வந்தன.

தொடர்ந்து ஆபாச படங்கள் வந்துகொண்டிருந்ததால், அப்பெண் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அந்த நம்பர் மேற்குவங்கத்தில் வாங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நம்பரை பயன்படுத்தி வந்த 24 வயதான முஸ்தாக் அலி சேக் என்ற வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த வாலிபர், ஆபாச படங்களை இளசுகளிடையே பகிர்வதற்காக வாட்ஸ்-அப்பில் தனி குரூப் வைத்திருந்துள்ளார்.

இருப்பினும் தனது குரூப்பில் அந்த பெண்ணின் நம்பர் தவறுதலாக சேர்ந்து விட்டதாகவும், வேண்டுமென்றே அவருக்கு ஆபாச படங்கள் அனுப்பவில்லை எனவும் அந்த வாலிபர் பொலிசில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers