தமிழர்கள் 7 பேரை விடுவிக்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்

Report Print Kabilan in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை மேடவாக்கத்தில் உள்ள மழலையர் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு உதவிகளை வழங்கிய அவர், பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் திகதி அன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers