திருமணமான பெண்ணை தன்னுடைய வலையில் வீழ்த்திய டிஎஸ்பி! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணமான பெண்ணை அவரின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிஎஸ்பி சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் கலிகிரி பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரசாத்-தனலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் வாழ்வாதாரத்தை தேடி ஹைதராபாத்திற்கு சென்ற போது, அங்கிருந்த டிஎஸ்பி துர்கா பிரசாத்துடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

டி.எஸ்.பி.துர்கா பிரசாத்

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது, அதன் பின் டிஎஸ்பி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தனலட்சுமி புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் டிஎஸ்பியுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனலட்சுமி கணவனையே தூக்கி வீசியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தனலட்சுமி குழந்தைகள்

அதில், இவர்களின் கள்ளத்தொடர்பு கணவரான பிரசாத்திற்கு தெரியவந்ததால், அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து டிஎஸ்பி சொன்னது போல தனலட்சுமி, கணவர் மீது காவல்நிலையத்தில் வரதட்சனை புகார் அளித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். இருப்பினும் டிஎஸ்பி ஆதரவருடன் அவர் தான் முதலில் இருந்த அப்பார்ட்மெண்டிலே குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.

தனலட்சுமி கணவர் ரெட்டி பிரசாத்

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியுடன், டிஎஸ்பி தனியாக இருந்த போது, பொலிசாரை அவருடைய அப்பார்ட்மெண்டிற்கு அழைத்து கணவன் பிரசாத் அழைத்து வந்தார். இந்த தகவல் டிஎஸ்பிக்கு தெரியவர அவர் தப்பி ஓடியுள்ளார்.

அதன் பின் பொலிசார் அங்கிருந்த தனலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, ரெட்டி என்னை கொடுமைபடுத்தினார், விருப்பத்தின் பேரிலே தான் டிஎஸ்பியுடன் வாழ்கிறேன் என்ற கூற, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவன் இனிமேலும் உன்னுடன் வாழ்வதற்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்று கூறி ஒரு குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

அப்போது பொலிசார் உனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இவருடன் ஒன்றாக வாழ் என்று அறிவுரை கூறி சென்றுள்ளனர். கள்ளத்தொடர்பு சட்டப்படி குற்றமில்லை என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் தீர்பு வழங்கியது.

குழந்தையை அழைத்து செல்லும் காட்சி

அந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், டிஎஸ்பி, தனலட்சுமி உறவில் எந்த தவறும் இல்லை. டிஎஸ்பி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால், அவரால் தனலட்சுமியை மணமுடிக்க முடியாது, தன்லட்சுமியின் கள்ளக்காதலால், அவரின் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் தான் தற்போது கேள்விகுறியாக உள்ளது.

தனலட்சுமி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்