நடிகன் சாவுக்கு போக நேரமிருக்கும் ரஜினிக்கு தமிழர்களை பார்க்க மட்டும் நேரமில்லை: நெட்டிசன்கள் விமர்சனம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளது. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

நிவாரண பொருட்களை மட்டும் வழங்கிய ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று பார்க்கவில்லை. இதனால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இது தவறான செய்தி என்றும் அவர் நலமாக இருக்கிறார் என மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரும், கன்னட நடிகருமான அம்பரீஷின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடகா சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு, கன்னட நடிகன் சாவுக்கு போக நேரமிருக்கும் ரஜினிக்கு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களை பார்க்க மட்டும் நேரமில்லை. ஆனால், நேரடியா முதலமைச்சர் ஆகவேண்டும் என ஆசை என நெட்சன்கள் விமர்சனம் செய்துள்ளனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers