எனது மகளை வேண்டுமென்றே பழிவாங்குபவர்கள் நல்லாயிருக்கமாட்டார்கள்: நடிகை காயத்ரியின் அம்மா

Report Print Deepthi Deepthi in இந்தியா

சொகுசு காரியில் குடிபோதையில் வலம் வந்த நடிகை காயத்ரி ரகுராம் பொலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தியுள்ளார்.

ஆனால், நான் கார் ஓட்டி வந்தபோது, என்னை வழிமறித்த பொலிசார் என்னிடம் லைசென்ஸ் கேட்டனர். அப்போது அது என்னிடம் இல்லை.

பொலிசாரின் விசாரணைக்கு நான் ஒத்துழைத்தேன், மற்றபடி நான் முழுபோதையில் இருந்த காரணத்தால், என்னை பொலிசார் வீட்டில் கொண்டு சென்றுவிட்டதாக வெளியான தகவல் பொய்யானவை என நடிகை காயத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னை வேண்டுமென்றே யாரோ பழிவாங்குகிறார்கள், அது யார் என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. நான் குடிக்கவில்லை என்பதை எனது அம்மா நம்புகிறார். என்னை தவறாக பேசுபவர்கள் பேசட்டும், அதுபற்றி நான் கவலைப்படப்போவதில்லை.

இதுபோன்ற பிரச்சனைகள் எனக்கு பழக்கமாகிவிட்டது என கூறியுள்ளார். காயத்ரியின் தாய் கூறியதாவது, எனது மகள் காயத்ரி மிகவும் நல்லவள். எனது மகளை வேண்டுமென்றே இப்படி பின்தொடர்ந்து சென்று பழிவாங்குகிறார்கள், அவர்கள் நல்லாவே இருக்கமாட்டார்கள்.

கடவுள் அவரை நிச்சயம் தண்டிப்பார் என கூறியுள்ளார்.

இந்நிலையில், பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கிறார் காயத்ரி ரகுராம். தற்போது, தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜக தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர். இந்த பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன்.

என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நான் சமீபகாலமாக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. ஆனாலும் சில இளம் மனதுகள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றன. இளந்தலைவர்களுக்கு வாழ்த்துகள்.

எல்லாம் கர்மா. அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால், இதே மோசமான இதயத்தோடு அல்ல. இப்படிப்பட்ட அரசியல் பற்றி பதிவிடகூட எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers