தமிழகத்தை சுழற்றிய கஜா புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை குவிந்துள்ள நிதியுதவிகளின் மொத்த விவரம் எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தில் சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன.

கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 46 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது,

மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 20 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 19 கன்றுகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், 1181 ஆடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 14,986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புயலினால் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 2018 டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, நவம்பர் மாதமே அதாவது தற்போதே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு நான் உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும், வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும்.

அரசியல் மற்றும் பிரபலங்களின் நிதி விவரம்

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் இயக்குநர் ஷங்கர்.

கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் ரூ. 40 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டு உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் 'கஜா' புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பி உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்