சேலம் மாவட்டத்தில் கணவன் காணாமல் போய்விட்டதாக கூறி நாடகமாடிய மனைவி 10 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உப்புக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (38).
தனியார் கிரானைட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக ஐஸ்வர்யா (38) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற செல்வகுமார், ஊர் சுற்றித்திரிவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையில் வெளியில் சென்றுவந்த ஐஸ்வர்யாவிற்கு, அதேபகுதியில் பைக் மெக்கானிக்காக இருக்கும் ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் செல்வகுமாருக்கு தெரியவரவே மது குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.
இதனால் கோபித்துக்கொண்டு ஐஸ்வர்யா தன்னுடைய மாமனார், மாமியாரிடம் உங்கள் மகனுடன் வாழ பிடிக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால் பெரியவர்கள் இருவரும் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கடந்த 10ம் தேதி முதல் செல்வகுமார் மாயமாகிவிட்டதாக அவருடைய மனைவி ஐஸ்வர்யா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், செல்வகுமாரின் உடலை வீட்டின் கிணற்று பகுதியில் இருந்து கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் ஐஸ்வர்யா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் ஐஸ்வர்யாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, கணவரை நான் தான் கொலை செய்தேன் என் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதற்கு தன்னுடைய காதலன் ரவி தான் திட்டம் வகுத்து கொடுத்தார் என கூறியுள்ளார்.