கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளி கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி: எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள மரக்கன்றுகள் உள்ளிட்ட பொருட்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்குகிறார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

சினிமா பிரபலங்களும் நிதியுதவி கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்குகிறார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்