துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட உருக்கமான பதிவு

Report Print Raju Raju in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரியுள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களை சூறையாடியுள்ள கஜா புயல் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகிறார்கள்.

பிரபலங்களும் அவர்களுக்கு உதவுவதோடு, எல்லோரும் உதவ முன் வரவேண்டும் என கூறி வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.

காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்