3 கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்த குற்றவாளிகள் திடீர் விடுதலை: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மூன்று கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளும் ஆளுனரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் 2010-ஆம் ஆண்டு சிறைதண்டனை கொடுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.அப்போது தருமபுரியில் சாலை மறியல்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

அந்த நேரத்தில் அங்கு சுற்றுலா வந்த கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோயமுத்தூருக்கும் திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த பேருந்தை வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது.

இதில் பேருந்தில் இருந்து மற்ற மாணவிகள் தப்பிக்க, கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, அவர்கள் வேலூர் மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இவர்களை விடுவிக்க தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஆளுநர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் அடிப்படையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நன்னடத்தை அடிப்படையில் இவர்கள் மூவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி வெளியானவுடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி பல வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

ஆனால் தற்போது அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இணையவாசிகள் தங்கள் ஆத்திரமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அதிமுக அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாகவும், கோரிக்கை காரணமாகவும் இந்த 3 பேர் விடுதலை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்