அம்மா....என்னை தனியா விட்டுட்டு போகாதே என்று கெஞ்சிய சிறுமி! கஜா புயலின் கோரத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பருவம் அடைந்திருந்த சிறுமி பெற்றோரின் மூடநம்பிக்கையாலே பரிதாபமாக இறந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் அதிகம் இருந்ததால், அங்கிருக்கும் ஏராளமான மக்கள் தங்களில் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றின் வேகம் காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்ததால், கால்நடைகள் இறந்தன.

இப்படி ஏற்கனவே மிகுந்த வேதனையில் இருக்கும் நிலையில், பருவம் ஏயதிய சிறுமியை தனி குடிசையில் பெற்றோர் தங்கவைத்ததால், அந்த சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவர், குடும்பத்தோடு தென்னந்தோப்பில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு விஜயா என்ற மகள் உள்ளார். ஏழாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, கடந்த வாரம் பருவம் அடைந்திருக்கிறார்.

இதனால் தீட்டு என்று கூறி, அவரின் பெற்றோர் அருகில் இருக்கும் தென்னந்தோப்பு குடிசையில் தங்க வைத்தனர்.

கடந்த 15-ஆம் திகதி கஜா புயல் தாக்கியபோதும் சிறுமி குடிசையின் உள்ளே இருந்ததால், அப்போது, புயலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெரிய வீடுகளே இடிந்து தரைமட்டமாகின.

விஜயா இருந்த குடிசையின் மேல் தென்னை மரம் ஒன்று விழுந்தது. இதில் விஜயா படுகாயமடைந்து பலியானார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், செல்வராஜ் கூலித்தொழிலாளி. வயதுக்கு வந்த விஜயாவை தீட்டு எனக் கூறி விஜயாவின் அம்மா அவரை தனியாக படுக்க வைத்திருக்கிறார்

அவர்கள் பத்து அடி கொண்ட மற்றொரு குடிசை வீட்டில் மகனுடன் இருந்ந்தனர். அப்போதே விஜயா அம்மாவிடம், எனக்கு பயமாக இருக்கு அம்மா, நான் உன்னோடயே இருக்கேன், தனியா விடாதே என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் அதற்கு விஜயாவின் அம்மா, நாங்க உன்னை தொடக்கூடாது. தொட்டா தீட்டு எனக் கூறி சமாதானம்செய்து குடியில் தங்கவைத்துள்ளார்.

அந்த சிறுமி கூறிய போதே உடன் அழைத்து சென்று, வீட்டில் தனியாக வைத்திருந்தால் தற்போது அவள் உயிரோடு இருந்திருப்பால், தீட்டு என்று கூறி அவரை தனியாக ஒதுக்கி வைத்ததால், பெற்றோர் அவரை இழந்து தவிக்கின்றனர்.

இதே போன்று இன்னும் பல கிராம மக்கள் அறியாமையில் இருந்து மீளாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்