கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல்: நடிகர் சூர்யா எவ்வளவு நிதியுதவி அளித்தார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 'கஜா' புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் புயல் பாதிப்பால் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பாக ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது.

இத்தகவலை நடிகர் சூர்யாவின் நண்பரும், அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருமான ராஜசேகரபாண்டியன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகிய குடும்பத்தினரின் சார்பாக அரசு சாரா அமைப்புகள் மூலம் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்