நடிகர் விஜய் மீது வழக்கு தொடர்ந்தது சரியானது தான்: சீமான் கருத்து

Report Print Deepthi Deepthi in இந்தியா

சர்கார் பட சுவரொட்டிகளில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருந்த காட்சி போஸ்டர்கள் கேரளாவில் ஒட்டப்பட்டது சமூகத்தில் தீய பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வ.உ.சிதம்பரனாரின் 82 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் சிதம்பரனார்க்கு அஞ்சலி செலுத்தி முடித்ததும் சீமானிடம், விஜய்யின் மீதான வழக்குப்பதிவு குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், கேரள அரசு செய்தது சரிதான். அதை இனி உணர்ந்து, தம்பி விஜய் இந்த மாதிரி காட்சிகளைத் தவிர்க்கணும். அவர் மட்டுமில்லாம எல்லா நடிகர்களும் தவிர்க்கணும்.

இதுக்கெல்லாம் முன்மாதிரியாக நமக்கு எம்.ஜி.ஆர் அவங்க இருக்காங்க. அக்கறையோடு சொல்றேன். அதை பின்பற்றணும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்