தமிழகத்தில் கள்ளக் காதலனனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகர் குருத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருக்கு தங்கராஜ்(35) என்ற மகன் உள்ளார்.
தங்கராஜ் பிரபல ரவுடி வசூர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் தங்கராஜுக்கும், அதே பகுதியில் கணவரைப் பிரிந்து இரண்டு மகன்களுடன் வாழும் தண்டுமாரி (39) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இதையடுத்து நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த தங்கராஜ் தண்டுமாரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், தங்கராஜ் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் தண்டுமாரியை குத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தண்டுமாரி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அருகில் இருந்த அவரின் மூத்த மகன் தர்மன்(19) ஓடி வந்து தாயைத் தாக்கிய தங்கராஜை தடுத்துள்ளார்.
இருப்பினும் தங்கராஜ் தொடர்ந்து குத்த முயன்றதால், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தண்டுமாரியும், அவரின் மகன் தர்மனும் சேர்ந்து கையில் கிடைத்த ஆயுதங்களால் ரவுடி தங்கராஜை பயங்கரமாக தாக்கினர்.
மேலும் தலையில் கல்லைப் போட்டு முகத்தைச் சிதைத்தனர். இதனால் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தங்கராஜை வீட்டிற்குள்ளேயே பிணமாக போட்டுவிட்டு மகன் தர்மனுடன் தண்டுமாரி தப்பி ஓடித் தலைமறைவாகி விட்டார்.
இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் தங்கராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய தாய்-மகனைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரவுடி கொல்லப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையி, ரவுடி தங்கராஜின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
எங்களின் நிம்மதியைக் கெடுத்து வந்தார். தெருவில் நடப்பவர்களை மறித்து பணம் பறித்தார். எது எப்படியோ அவர் கொலை செய்யப்பட்டது ஒரு விதத்தில் எங்களுக்குச் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று கூறியுள்ளனர்.