சமீபத்தில் நடிகை அக்ஷராஹாசனின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த புகைப்படங்கள் படப்பிடிப்பு ஒன்றிற்காக எடுக்கப்பட்டது என்றும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது வேதனையளிக்கிறது என அக்ஷராஹாசன் தெரிவித்திருந்தார்.
புகைப்படங்களை வெளியிட்ட மர்ம நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்குமாறு பொலிசில் புகார் செய்தார்.
அவரின் புகாரின் பேரில் பொலிசார் அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலன் தனுஜ் விர்வாணியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுபற்றி தனுஜ் விர்வானி அளித்துள்ள விளக்கத்தில், என்னிடம் பொலிசார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. விசாரணை செய்தால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
நவம்பர் 2 ஆம் தேதி அவரது இந்த புகைப்படங்கள் வெளியானது பற்றி அறிந்தேன். உடனடியாக அக்ஷராவுக்கு போன் செய்து விசாரித்தேன். அவர், இது உன் வேலையா? என்று கேட்டார். இல்லை என்றேன்.
நாங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால் அவரது புகைப்படங்களை நான் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. என்னிடம் இருந்த அவரது புகைப் படங்களை நான் அழித்துவிட்டேன்.
எங்கள் இருவருக்கும் காதலித்தபோதும் பிரிந்த போதும் எந்த கசப்பான சம்பவங்களும் நடக்கவில்லை. இது அக்ஷராவுக்கு தெரியும் என கூறியுள்ளார்.