7 தமிழர்களை பற்றி தெரியாத உங்களுக்கு.... ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய சரத்குமார்

Report Print Raju Raju in இந்தியா

7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த்தை, சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

திருவாடானை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்.

வந்தாரை வாழ வைப்போம். ஆள வைக்க விட மாட்டோம். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்றால் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

7 பேர் விடுதலை குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட போது அவர் எந்த 7 பேர், நான் இப்போது தான் வருகிறேன் என்று கூறியிருந்தார்.

7 தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் தமிழக அரசியல் பேசக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்