குழந்தையை கொன்றுவிட்டு இளம் விதவை எடுத்த அதிர்ச்சி முடிவு: தமிழில் எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in இந்தியா
511Shares

தமிழகத்தில் பொலிசாரின் டார்ச்சரால் குழந்தையை கொன்றுவிட்டு, விதவை பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு பாலம்மாள்(25) என்ற மனைவியும் பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

இநிலையில் சண்முகசுந்தரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திடீரென்று இறந்து விட்டார். இதனால் பாலம்மாள், தன்னுடைய குழந்தை பாலகுமாருடன் மூலைக்கரைப்பட்டி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து நேற்று இரவு பாலம்மாள் திடீரென்று மகன் பாலகுமாரின் கழுத்தில் சேலையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செயது பின்னர் அதே சேலையால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் பொலிசார் பாலம்மாளின் வீட்டில் சோதனை நடத்திய போது அவர் எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில்,கணவர் இறந்தபின்னர் பாலம்மாளுக்கும் அவரது மாமியார் மகராசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த‌து. கணவரின் ஆதார் அட்டையை மகராசி எடுத்து வைத்துக்கொண்டு கொடுக்க மறுத்தாராம். அதுமட்டுமின்றி பாலம்மாள் மீது மகராசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் பாலம்மாளிடம் பொலிசார் விசாரித்தபோது அவர்கள் அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இது பாலம்மாளை மனவேதனை படுத்தியது. ஏற்கனவே கணவரை பறிகொடுத்த வேதனையில் இருந்த பாலம்மாள், அடுத்து பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

இதனால் ஏற்பட்ட வேதனையில் அவர் மகனை கொன்று தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்