காதலனுக்காக அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறி திருமணம் செய்துகொண்ட காதலன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நண்பர்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காரணத்தால், அதில் ஒரு நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.

சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் முதல் முதலாக மொடலிங் போட்டியில் சந்தித்துக்கொண்டார்கள்.

அதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள், நாளடைவில் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

தங்களையே அறியாமல் அதிகளவு அன்பை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

இருவரும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உறவை யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, யாராவது ஒருவர் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, ஆணாக இருந்த அனிக் தத்தா, தனது பாலினத்தை அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன், அனிக் தத்தா, தன் காதலன் சக்னிக் சக்ரபோர்தியை திருமணமும் செய்து கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...