பொலிசாரின் முன் திடீரென ஆடைகளை களைந்த நடிகை: வைரலான வீடியோவின் பின்னணி

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் பொலிசாரின் முன் அரைநிர்வாணத்தில் இளம்பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வைரலானதை அடுத்து பெண்ணின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகையும் மொடல் அழகியான மேகா சர்மா மும்பையில் உள்ள கட்டிடம் ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வருகிறார்.

இவர் கடந்த 27ம் தேதியன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கட்டிடத்தின் காவலாளி என்னிடம் தவறாக நடந்துகொண்டார். உடனே நான் அவசர அழைப்புக்கு போன் செய்து புகார் கொடுத்தேன். உடனே வந்த பொலிஸார் இரவு 1 மணிக்கு என்னை காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறு கூறினார்.

ஆனால் அவர்களுடன் ஒரு பெண் பொலிஸ் கூட இல்லாத காரணத்தினால், அதற்கு நான் மறுப்பு தெரிவித்து, அறைக்கு சென்றுவிட்டு அதிகாலை என்னுடைய வழக்கறிஞருடன் வருவதாக தெரிவித்தேன்.

ஆனால் பொலிஸார் அதனை காதில் வாங்காமல் என்னை வருமாறு வற்புறுத்திக்கொண்டிருந்தனர். வேறுவழியில்லாமல் நான் என்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு அவர்களின் முன் நின்றேன். உடனே அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் 3 நபர்கள் மட்டும் என்னை வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். அதனை கூட பொலிஸார் தடுக்கவில்லை. மும்பை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம் என பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் சம்மந்தப்பட்ட பெண், காவலாளியாக பணிபுரியும் அலோக் என்பவரை தாக்குவதோடு, பொலிசாரின் முன் அரைநிர்வாணத்தில் நிற்கும் வீடியோ காட்சியும் இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், சம்பவம் நடந்த 25ம் தேதியன்று மேகா மது போதையில், காவலாளிக்கு போன் செய்து அறைக்கு சிகரெட் எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு காவலாளி அலோக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மேகா 15வது மாடியிலிருந்து கீழே வந்து அலோக்கை தாக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த போது ஆடைகளை களைந்து அரை நிர்வாணத்தில் நின்று கொண்டு கத்தினார். இதனால் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார்.

உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் metoo விவகாரங்கள், ஒரு சில பெண்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...