ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்தை தவிர்க்க நோயாளி செய்த நெகிழ்ச்சியான செயல்

Report Print Raju Raju in இந்தியா

தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர் பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீட்டர் ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கொரங்கிபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா புஜாரி (53). இவருக்கு கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களை அவரை தினமும் வாக்கிங் போக சொன்னார்கள்.

இதையடுத்து அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் புஜாரி வாக்கிங் சென்றார்.

கடந்த சனிக்கிழமை அவர் வாக்கிங் சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த பகுதியில் ரயில்கள் வரும் நேரமாச்சே என கருதிய புஜாரி இதனால் விபத்து ஏற்படலாம் என நினைத்தார்.

இதையடுத்து தனது உடல்நலத்தையும் பொருட்ப்படுத்தாமல் அருகில் உள்ள உடுப்பில் ரயில்வே நிலையத்துக்கு ஓடினார்.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த ஸ்டேசனுக்கு ஓடி சென்று தகவலை சொன்னார்.

இதையடுத்து உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள் அடுத்து வர இருந்த ரயில்களை முந்தைய ஸ்டேஷன்களிலேயே நிறுத்த சொன்னார்கள்

புஜாரியின் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறிய நிலையில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்