இது என் குழந்தை இல்லை! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை..திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தின் இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இதில் சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில் அவரை திவாகரன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுபாஷினி அளித்த புகாரின் பேரில் திவாகரனை பொலிசார் கைது செய்திருந்தனர். ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த திவாகரன், சுபாஷினியை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் சுபாஷினிக்கு பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என கூறி அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரச்சினை அதிகரிக்கவே குழந்தை விஜயராஜை கழுத்தை நெறித்து கொன்றதோடு கண் மற்றும் மூக்கில் மிளகாய் பொடியை கொட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் திவாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers