ஒரு பெண்ணைதானே வைரமுத்து அழைத்தார்! அசிங்கம் பிடிச்சவர் ....பிரபல நடிகர் விளாசல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாரிமுத்துவை விமர்சித்து நடிகர் சித்தார்த் டுவிட் செய்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வைரமுத்து ஒரு ஆம்பிளை. அவர் ஒரு பெண்ணை படுக்கைக்கு கூப்பிட்டதில் தவறு என்ன இருக்கிறது. ஒரு ஆணை கூப்பிட்டிருந்தால் தான் அது தவறு.

விருப்பமுள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் இதுபோல் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்கள்.

இந்த பாலியல் புகார் விவகாரத்தில், வைரமுத்துவின் புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வரவாய்ப்பில்லை.

மாரிமுத்துவின் இந்த பதில் மட்டும் இணையதளத்தில் தனி வீடியோவாக பலரால் பகிரப்பட்டு வருகிறது. மீடூ இயக்க ஆதரவாளர்கள் பலர், மாரிமுத்து சொன்ன பதிலுக்கும், பதில் சொன்ன தொனிக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது, நடிகர் சித்தார்த்தும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

"இந்த அசிங்கம் புடிச்சவர் பரியேறும் பெருமாள் படத்துல கெட்டவனா நல்லா நடிச்சார்னு நினைச்சேன். அவனே தான நீ? சீ..." என்று சித்தார்த் தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers