பொது இடத்தில் மோசமாக நடந்து கொண்ட நடிகர் சிவக்குமார்! வீட்டிலேயே இருக்கனும் என நெட்டிசன்கள் ஆவேசம்

Report Print Santhan in இந்தியா

திரைப்பட நடிகரான சிவக்குமார் தன்னோடு செல்பி எடுக்க வந்த இளைஞனின் செல்போனை தட்டி விட்ட விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் எதிரொலித்துள்ளது.

சினிமா பிரபலங்கள் என்றால் அவர்களுடன் இணைந்து எப்படியாவது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது சகஜம் தான்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில், 1960 வதுகளில் கதாநாயகனாக அறிமுகமாகி, பின் குணச்சித்திர நடிகர் என்று தற்போது வரை திரையுலகத்தில் தனக்கான ஒரு அடையாளத்தை பதித்திருப்பவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார்.

இவர் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு ரசிகன் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சிவகுமார் அந்த ரசிகனின் போனை கீழே தள்ளி விட்டார்.

சிவகுமாரை எந்த தொந்தரவும் செய்யாமல் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என முயற்சித்த, அவர் திடீர் என சிவகுமார் இப்படி மோசமாக நடந்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த இடத்தில் அசாதரணமான சூழ்நிலையை உருவாக்கினாலும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்போது சிவக்குமாரை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யோகாவையும், தியானைத்தையும் சொல்லிக்கொடுப்பவர் பொது இடத்தில் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் கோபப்படலமா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது வெட்கப்பட வேண்டிய செயல். ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது. உங்களுக்கு செல்பி எடுப்பது பிடிக்கவில்லை எனில் வீட்டிலேயே இருக்க வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில், பொது இடத்தில் பிரபலங்களுடன் செல்பி எடுக்கும் முன் அவர்களுடன் அனுமதி கேட்க வேண்டும். அந்த இளைஞர் நடந்து கொண்டது தவறு எனவும் சிலர் சிவக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...