பாம்பாட்டியின் கையில் இருந்த பாம்பை திடீரென்று பிடிங்கிச் சென்ற குரங்கு! அதன் பின் நடந்த வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பாம்பாட்டியின் கையில் இருந்த பாம்பை, குரங்கு ஒன்று பிடிங்கி வாயில் வைத்த படி ஓடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேசத்தின் Vrindavan பகுதியில் இருக்கும் Banke Bihari கோவில் அருகில் பாம்பாட்டி ஒருவர் அங்கிருக்கும் மக்கள் முன்னிலையில், தன்னுடைய பையில் இருந்த பாம்பு ஒன்றை எடுத்து காண்பிக்க முடிவு செய்திருந்தார்.

அப்போது திடீரென்று அங்கிருந்த குரங்கு ஒன்று, இந்த பாம்பாட்டியை உன்னிப்பாக கவனித்து, அவர் பாம்பை வெளியில் எடுத்தவுடன் பாம்பை பிடிங்கி வாயில் வைத்த படி அங்கிருக்கும் சுவற்றில் ஏறி ஓடி விடுகிறது.

அதன் பின் அந்த பாம்பாட்டி, அந்த குரங்கை பிடிக்க போராடுகிறார். இறுதியில் குரங்கை பிடித்தாரா?இல்லையா? என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers