மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம்: பெற்ற மகளை தீ வைத்து எரித்த தந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், கொம்மரோலுவை அடுத்த நாகிரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த சைதன்யா என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த ஆவுலையா என்பவற்றின் மகள் இந்திரஜா (20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே கல்லுரியில் படிக்கும் போதே காதல் மலர்ந்துள்ளது. இந்திரஜா தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சைதன்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய காதல், ஆவுலையாவிற்கு தெரியவரவே, வேற்று சமூகத்தை சேர்ந்த சைதன்யாவை மறந்துவிடுமாறும், தான் கைகாட்டும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஆனால் காதலை தொடர்ந்து இந்திரஜா, தினமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆவுலையா நேற்று இரவு, தூக்கில் தொங்கவிட்டவாறு இந்தியரஜாவை கொலை செய்ததோடு, இன்று அதிகாலை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வைத்து எரித்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பொதுமக்கள், வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளையே ஆவுலையா கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கூறியுள்ள ஆவுலையா உறவினர்கள், இந்திரஜா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகா தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ஆந்திர மாநிலத்தில் அதிகமான ஆணவக்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers