ஐபிஎஸ் மகனுக்கு சல்யூட் அடிக்கும் கான்ஸ்டபிள் தந்தை: நெகிழ்ச்சி தருணம்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் லக்னோவில் கான்ஸ்டபிள் ஜனார்தன் சிங் மற்றும் அவரின் மகன் ஐபிஎஸ் அதிகாரி அனூப் குமார் சிங் ஒரே இடத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தன்னை விட தன் பிள்ளைகள் நல்ல பதவியில் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் ஆசையாகும்.

இதை நிரூபிக்கும் விதமான தந்தையின் கனவை நனவாக்கி இருக்கிறார் அனூப் குமார் சிங்.

பணிக்கு சேர்ந்த முதல் நாள் லக்னோவில், விபூதிகண்ட் காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஜனார்தன் சிங், உயரதிகாரியான தன் மகனுக்கு எழுந்து நின்று விதிப்படி சல்யூட் அடித்தது, அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இதுகுறித்து ஜனார்தன் சிங் கூறுகையில், தன் மகனை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனக்கு முதலில் மேலதிகாரி என்றும், பின்னர் தான் தன்னுடைய மகன் எனவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers