ஆபாச ஆடையா? சின்மயியின் விளக்கம் இதோ

Report Print Fathima Fathima in இந்தியா

MeToo செய்தியாளர் சந்திப்பில் ஆபாச ஆடை அணிந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் சின்மயி, தொடர்ந்து MeToo தொடர்பான புகார்கள் எழுந்துவரும் நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

அதில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, இயக்குநர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது சின்மயி ஆபாச ஆடை அணிந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, தமிழ்ச் சமூக ஆண்கள் இப்படிப்பட்ட மீம்களைப் பகிர்கின்றனர். பாடகிகள் என்றால் புடவைதான் அணிய வேண்டும்.

சின்மயி போன்று ஆபாசமாக அணியக் கூடாது என்று சொல்லி இருக்கின்றனர். அன்று எனக்குக் கழுத்து வலி வராமல் இருக்க அத்தகைய ஆடையை அணிந்தேன். அதுவொன்றும் உள்ளாடை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers