பிரபல நடிகரின் இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய முதல் மனைவி: தெருவுக்கு வந்த குடும்ப மானம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி, அவரது இரண்டாவது மனைவியை அடித்து துன்புறுத்திய நிலையில் பொலிசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார்.

இந்நிலையில் கீர்த்தியை, நாகரத்னா அடித்து துன்புறுத்தியதாக பொலிசிடம் புகார் தரப்பட்டது. இது குறித்து விசாரித்த பொலிசார் விஜய் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது நாகரத்னா, கீர்த்தியை மோசமாக திட்டியதும் செருப்பால் அடித்ததும் உறுதியானது.

இதையடுத்து நாகரத்னாவை கைது செய்ய அவர் வசிக்கும் வேறு வீட்டுக்கு பொலிசார் சென்றனர்.

அப்போது அங்கிருந்த அவரின் மகள் மோனிகா தனது அம்மா வீட்டில் இல்லை என கூறியதோடு, பொலிசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார்.

இதையடுத்து பொலிசார் மோனிகாவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதோடு தலைமறைவாக உள்ள நாகரத்னத்தை தேடி வருகிறார்கள்.

மகள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்த விஜய் உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று அவரை பார்த்தார்.

அவர் கூறுகையில், நாகரத்னம் பொலிசிடம் சரணடைய வேண்டும், அவரால் மோனிகாவின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும்.

என் மகள் சிறையில் இருப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers