நடிகையின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையில் நடிகையின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தி நடிகை ஒருவரிடம் கார் டிரைவராக கன்கையா ஜா (வயது28) என்பவர் வேலை பார்த்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார்.

இந்தநிலையில், நடிகையின் 21 வயது மகளின் செல்போன் எண் கன்கையா ஜாவுக்கு கிடைத்து உள்ளது. இதனால் அவர் நடிகையின் மகளுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கன்கையா ஜா மீது ஜூகு பொலிசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவத்தன்று நடிகையின் மகள் போல் பேசி, வேலை விஷயமாக பேசுவதற்கு ஜூகு பகுதிக்கு வரும்படி அழைத்தனர்.

இதை நம்பி அங்கு வந்த கன்கையா ஜாவை பொலிசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers