இனி அவனை சந்திக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிய மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரை சேர்ந்தவர் மோனுகுமார். இவர் தனது மனைவி ராஷ்மி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மோனுகுமார் திடீரென விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் மோனுகுமாரின் மனைவி ராஷ்மி தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என மோனுகுமாரின் தந்தை பொலிசில் புகார் அளித்தார்.

அவர் கூறுகையில், ராஷ்மிக்கும் காஞ்சன் குமார் என்ற இளைஞருக்கும் இடையில் தவறான தொடர்பு இருந்தது. இதை கண்டுப்பிடித்த மோனுகுமார் மனைவியை கண்டித்தார்.

இதையடுத்து இனி காஞ்சன்குமாரை சந்திக்கமாட்டேன் என ராஷ்மி உறுதியளித்தார். ஆனால் வாக்குறுதியை மீறி மீண்டும் காஞ்சன்குமாரை சந்தித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மோனுகுமார் விஷம் குடித்தார் என கூறினார்.

இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய பொலிசார் ராஷ்மி மற்றும் காஞ்சன்குமாரை கைது செய்துள்ளார்.அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers