லட்சியத்துடன் ஐஏஎஸ் படிக்க சென்ற தமிழக மாணவி தற்கொலை: பகீர் கடிதம் சிக்கியது

Report Print Raju Raju in இந்தியா

டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் ஆலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் - மகாதேவி தம்பதிக்கு ஸ்ரீமதி (21) என்ற மகளும், வருண் என்ற மகனும் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் எடுத்த ஸ்ரீமதி கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. சோசியாலஜி படித்து முடித்தார். இதையடுத்து, ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும் என்ற லட்சியத்தில் டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில், கடந்த 6 மாதங்களாக பயின்று வந்தார்.

தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்த ஸ்ரீமதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

இது குறித்து விசாரித்த பொலிசார் ஸ்ரீமதி எழுதிய கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், எனக்கு டெல்லி சூழல் பிடிக்கவில்லை. சொந்த பிரச்னைக்காக தற்கொலை செய்து கொள்கிறேன். இது எனது தவறுதான். தம்பியை நல்லமுறையில் பார்த்துக்கொள்ளவும் என குறிப்பிட்டிருந்தார்

ஸ்ரீமதியின் இறப்பு குறித்து, உறவினர்கள் கூறுகையில், டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை. இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மாநில அரசு விரைவான நடவடிக்கையை எடுத்து உண்மையை கண்டறியவேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers