இளம்பெண்கள் சபரிமலை சென்றால் 7 தலைமுறைக்கு குழந்தை பிறக்காது: இணையத்தை ஆக்கிரமித்த தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்றால் ஏழு தலைமுறைக்கு குழந்தை பிறக்காது என மரணமடைந்த பந்தளம் அரச குடும்பத்து முதியவர் ஒருவர் சாபமிட்டதாக வெளியான தகவல் பொய் என தெரியவந்துள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிப்பதை தடுப்பதற்காகவே இந்தப் பொய் பிரசாரம் நடத்தப்படுவதாகவும் பந்தளம் அரச குடும்பத்து உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் மிகவும் பிரபலமான ஐயப்ப கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் மாநிலம் முழுவதும் ஆதரித்தும் எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மட்டுமின்றி, பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் பிரச்னை தொடர்பாகவும் சிலரால் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஓராண்டுக்கு முன்னர் காலமான பந்தளம் அரச குடும்பத்தின் முக்கிய நபரான பந்தளம் அம்மையார் கூறியதாக ஒரு பிரசாரம் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அதில், பந்தளம் அம்மையாரின் புகைப்படத்துடன், எனது மகன் குடிகொள்ளும் இந்த புனித தலத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களும் அதற்கு முயற்சிப்பவர்களும் ஏழு தலைமுறைக்கு புத்திர பாக்கியம் இல்லாமலும், நோயால் அவர்களது குடும்பம் அவதிக்கு உள்ளாகும், நிதி நெருக்கடியால் அவதிப்படுவார்கள் என, பந்தளம் அம்மையார் சாபமிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலமான அம்ப தம்புராட்டி என அறியப்படும் பந்தளம் அம்மையார் இதுபோன்று ஒருபோதும் கூறியது இல்லை எனவும்,

இணையத்தில் வெளியான அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் பந்தளம் குடும்பத்தினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்