ஸ்முல் ஆப்-ல் அடிமையான ஆசிரியை: பள்ளி செல்வதை மறந்து விடியவிடிய பாடல் பாடிய கொடுமை

Report Print Vijay Amburore in இந்தியா

திண்டுக்கல் மாவட்டத்தில், பாடல் பாடுவதில் அடிமையான ஆசிரியை ஒருவர் பள்ளி செல்வதை மறந்து விடிய விடிய பாடல் பாடிக்கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி.

இவர் செல்போனில் பாடல் பாட பயன்படும் ஸ்முல் ஆப்பினை பதிவிறக்கம் செய்து தினமும் பாடல்கள் பாட ஆரம்பித்துள்ளார்.

நாளடைவில் அதில் உள்ள ஆர்வம் அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு வண்ண உடைகளில், அலங்காரம் செய்து பாடல் பாடி வந்துள்ளார். இரவு முழுவதும் பாடல் பாடிய முத்துலட்சுமி, பள்ளி செல்வதையே மறந்து பகலில் உறங்க ஆர்மபித்துள்ளார்.

3 வாரங்கள் அவர் பள்ளிக்கு வந்தால் அதுவே பெரிய அதிசயம் என அவருடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அப்படியே பள்ளி சென்றாலும் அங்கு மாணவர்களுக்கு சரியாக படம் எடுப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

தற்போது இந்த புகார் மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers